இன்றைய ராசிபலன் - 25.5.2024


Today Rasi Palan
x

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் வைகாசி மாதம் 12-ம் தேதி சனிக்கிழமை

நட்சத்திரம் : இன்று காலை 11.06 வரை கேட்டை பின்பு மூலம்.

திதி : இன்று மாலை 07.24 வரை துவிதியை பின்பு திரிதியை

யோகம் : சித்தயோகம்

நல்ல நேரம் காலை : 7.30 - 8.30

நல்ல நேரம் மாலை : 4.30 - 5.30

ராகு காலம் காலை : 9.00 - 10.30

எமகண்டம் பிற்பகல் : 1.30 - 3.00

குளிகை காலை : 6.00 - 7.30

கவுரி நல்ல நேரம் காலை : 10.30 - 11.30

கவுரி நல்ல நேரம் மாலை : 9.30 - 10.30

சூலம் : கிழக்கு

சந்திராஷ்டமம் : அஸ்வினி, பரணி

இன்றைய ராசிபலன்:

மேஷம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் பல காரியதடைகள் ஏற்படும். ஆகையால், புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது.

அதிர்ஷ்டநிறம் : ரோஸ்

ரிஷபம்

உத்யோகத்தில் வேலைபளு மிகும் மாணவர்கள் திட்டமிட்டு படிப்பர். அலைச்சல் அதிகரிக்கும். விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி விற்பனையைக் கூட்டுவர். உடன்பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வந்து போகும்.

அதிர்ஷ்டநிறம் : நீலம்

மிதுனம்

கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். சுப காரியம் கைகூடும். எதிர்பாலினத்தவரிடம் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது. உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை புரிந்துக் கொள்வார்கள்.

அதிர்ஷ்டநிறம் : பச்சை

கடகம்

யாரிடமும் அதிகமாக பேசுவதை தவிர்ப்பது பல பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள வழிவகுக்கும்.தம்பதிகளின் ஒற்றுமை மேலோங்கும். உடல் நலம் பளிச்சிடும். உத்யோகஸ்தர்கள் தாங்கள் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும்.

அதிர்ஷ்டநிறம் : ரோஸ்

சிம்மம்

உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்பு கிடைக்கும். பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் இயற்கை மருத்துவத்தால் சரியாகும். மாணவர்கள் காதலில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்து கொள்வது நல்லது. வழக்கில் திருப்பம் ஏற்படும்.

அதிர்ஷ்டநிறம் : பச்சை

கன்னி

பயணத்தின் போது கவனம் தேவை. வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. சமையற்கலையில் ஆர்வம் கூடும். மாணவர்களின் மதிப்பெண் விகிதம் கூடும். கணவன்-மனைவிக்குள் அன்பு கூடும். அரசியலில் ஆர்வம் மிகும். பணப் புழக்கம் மிகும்.

அதிர்ஷ்டநிறம் : நீலம்

துலாம்

மாணவர்கள் விளையாட்டுத் துறையில் வெற்றிகளை குவிப்பர். தாயின் தேவையை நிறைவேற்றுவீர்கள். உத்யோகஸ்தர்கள் தாங்கள் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். பெரிய பதவிகள் தேடி வரும். நாடாளுபவர்கள் உதவுவார்கள்.

அதிர்ஷ்டநிறம் : வெள்ளை

விருச்சிகம்

வியாபாரத்தில் வளர்ச்சியும் பணவரவும் கூடும். பெண்கள் குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவர். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சமூகம் மற்றும் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பெண்கள் கூடுமானவரை சிக்கனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்டநிறம் : சாம்பல்

தனுசு

வழக்கில் தங்களுக்கு முக்கியமான திருப்பம் ஏற்படும். விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி விற்பனையைக் கூட்டுவர். வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சகோதரர்களிடையே நிலப்பிரச்சினைக்கு சமரசத் தீர்வு காண்பர்.

அதிர்ஷ்டநிறம் : ஊதா

மகரம்

குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைத் தேவை. சென்ற இடமெல்லாம் செல்வாக்கு கூடும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்

கும்பம்

பெண்களுக்கு உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். நவீன வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். கட்டிட வரைபடமும் அப்ரூவலாகும். தாய்வழியில் மதிப்பு, மரியாதைக் கூடும்.

அதிர்ஷ்டநிறம் : நீலம்

மீனம்

திருமணம் கைகூடும். ஏற்ற துணை அமைவார். பொது நலத் தொண்டாளர்களுக்கு பெரிய பதவிகள் தேடி வரும். நாடாளுபவர்கள் உதவுவார்கள். இழுபறியாக இருந்த வீட்டு மனை வாங்குவது, விற்பது தொடர்பான விசயங்கள் தங்களுக்கு சாதகமாக அமையும்.

அதிர்ஷ்டநிறம் : சிவப்பு


Next Story