இன்றைய ராசிபலன் - 27.07.2024


இன்றைய ராசிபலன் - 27.07.2024
x

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் ஆடி மாதம் 11ம் தேதி சனிக்கிழமை

நட்சத்திரம்: இன்று காலை 05.27 வரை ரேவதி பின்பு அஸ்வினி

திதி: இன்று அதிகாலை 03.28 வரை சஷ்டி பின்பு சப்தமி

யோகம்: மரண, சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 10.45 - 11.45

நல்ல நேரம் மாலை: 4.45 - 5.45

ராகு காலம் காலை: 9.00 - 10.30

எமகண்டம் மாலை: 1.30 - 3.00

குளிகை காலை: 6.00 - 7.30

கவுரி நல்ல நேரம் காலை: 12.15 - 1.15

கவுரி நல்ல நேரம் மாலை: 9.30 - 10.30

சூலம்: கிழக்கு

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்

ஆடிக் கழிவுகள் சலுகைகளை வைத்து தங்கள் பழைய சரக்குகளை விற்று லாபத்தை பார்ப்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். தாய் வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

ரிஷபம்

திருமண வயதில் உள்ள உங்கள் பிள்ளைக்கு நல்ல வரண் கிட்டும். புதுத்தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். வியாபாரத்தில் வரவுக்கேற்ற செலவு வரும். குடும்பத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வர். உடல் நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

மிதுனம்

வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் போது தங்கள் உடைமைகளின் மீது கவனம் வைக்கவும். வாராக் கடன் வந்து சேரும்.பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக இன்று தாங்கள் பல முக்கிய அடிப்படை வசதிகளை பூர்த்திசெய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கடகம்

வியாபாரிகளுக்கு தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவதில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். பிறந்தநாள் விழா மற்றும் சுப காரியங்களுக்கு தாங்கள் கலந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பகுதி நேரமாக பெண்கள் பணிபுரிவர். ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

சிம்மம்

இன்று பூரம், உத்திரம் நட்சத்திரக்காரர்கள் தங்களுடைய அனைத்துவிதமான காரியங்களை துவங்கலாம். ஆனால், மகம் நட்சத்திரக்காரர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். மேலும், தாங்கள் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. காரணம் தங்களுக்கு சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கன்னி

அரசியல்வாதிகள் மற்றும் பொது நல சேவையில் உள்ளவர்களுக்கு உங்கள் பேச்சுத் திறன் கூடும். தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்குவர். தொழில் மந்தம் நீங்கும். தனியார் உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு போக்குவரத்து சலுகைகள் கிட்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

துலாம்

இதுவரை தங்களுக்கு முக்கியத்துவம் தராத உங்கள் உயரதிகாரிகள் சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பர். நடைபாதை வியாபாரிகளுக்கு நல்லதொரு லாபத்தை ஈட்டுவார்கள். கணவரின் கருத்தை கேட்பது நல்லது. கலைத்துறையினருக்கு சில திருப்பங்கள் கிடைக்கும். உடல் உபாதை நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்

விருச்சிகம்

குறிப்பிட்ட நாளில் செல்ல வேண்டிய வெளியூர் பயணத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். திருமணம் விசயத்தில் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு வேலைபளு கூடும். சக ஊழியர்களின் உதவியைப் பெற்று முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

தனுசு

உத்யோகஸ்தர்கள் அதிகாரிகளிடம் பாராட்டைப் பெறுவர். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். வியாபாரிகளுக்கு விற்பனை மிகும். குடும்பத் தலைவிகளின் கனவு நனவாகும். கணினித் துறையில் உள்ளவர்களுக்கு பெரிய கம்பெனியிலிருந்து அழைப்பு வரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மகரம்

வேலை பளுவால் டென்ஷன் ஆவீர்கள், இருப்பினும் அதனை காட்டிக்கொள்ளாமல் இனிதே முடித்துவிடுவீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ள மந்தம் நீங்கும். தாமதமான காரியம் சட்டென்று முடியும். மரச்சாமான்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு நல்ல விற்பனை கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

கும்பம்

உத்யோகத்தில் நிர்வாகிகள் பாராட்டுவர். கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும். புதிய படங்கள் கிடைத்துவிடும். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பிள்ளைகள் வெளியூர் செல்வர். இளைஞர்களுக்கு திருமண முயற்சிகள் தாமதமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மீனம்

உத்யோகஸ்தர்கள் தங்கள் அலுவலகத்தில் சில புது முடிவுகள் எடுக்க உரிமையளிக்கப்படும். உறவினர்களின் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பழைய வாகனத்தை சீர் செய்வீர்கள். பிரிந்த நண்பர்கள் இனி கை கோர்ப்பர். தேக ஆரோக்கியம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு


Next Story