இன்றைய ராசிபலன்


இன்றைய ராசிபலன்
x

மேஷ ராசிகாரர்களுக்கு பதவி உயர்வு கிட்டும். வெளியூர் பயணங்கள் நன்மையைத் தரும்.

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி வருடம் வைகாசி மாதம் 14-ம் தேதி திங்கட்கிழமை

நட்சத்திரம் : இன்று காலை 10.36 வரை பூராடம் பின்பு உத்திராடம்.

திதி : இன்று மாலை 05.08 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி

யோகம் : சித்த, மரண யோகம்

நல்ல நேரம் காலை : 9.30 - 10.30

நல்ல நேரம் மாலை : 4.30 - 5.30

ராகு காலம் காலை : 07.30 - 09.00

எமகண்டம் காலை : 10.30 - 12.00

குளிகை பிற்பகல் : 1.30 - 3.00

கௌரி நல்ல நேரம் பிற்பகல் : 01.30 - 02.30

கௌரி நல்ல நேரம் மாலை : 07.30 - 08.30

சூலம் : கிழக்கு

சந்திராஷ்டமம் : கிருத்திகை, ரோகிணி

ராசி பலன்

மேஷம்

தம்பதிகளின் கனவு நனவாகும். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிட்டும். வெளியூர் பயணங்கள் நன்மையைத் தரும்.வழக்கு சாதகமாகும். தள்ளி போன சுபகாரியம் நடந்தேறும். பணம் தாராளமாக வரும். அத்தியாவசிய தேவை நிறைவேறும்.

அதிர்ஷ்டநிறம் : ரோஸ்

ரிஷபம்

கிருத்திகை மற்றும் ரோகிணி நட்சத்திரக்காரர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். காரணம் இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம். மேலும், தாங்கள் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. இன்று மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்கள் தங்களுடைய அனைத்துவிதமான காரியங்களை துவங்கலாம்.

அதிர்ஷ்டநிறம் : பச்சை

மிதுனம்

பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவர். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு பிடித்த வரன் அமையும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு. மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும். காதல் கசக்கும்.

அதிர்ஷ்டநிறம் : கிரே

கடகம்

உத்யோகஸ்தர்களுக்கு நல்ல பொறுப்பு கிடைக்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு தங்களின் திருமண கனவு நிறைவேறும். மாணவர்களின் எண்ணம் ஈடேறும். நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். பாதியில் முடங்கிக் கிடந்த கட்டிடம் மற்றும் வீடு கட்டும் பணி முழுமையடையும்.

அதிர்ஷ்டநிறம் : நீலம்

சிம்மம்

சுபநிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேறும். பெண்களின் சேமிப்பு உயரும். கணவரின் அன்புக்குரியவராக விளங்குவர். பொது சேவையில் உள்ளவர்களுக்கு மக்கள் ஆதரவு கிட்டும். புதிய தொழிலில் ஆர்வம் கூடும். பணம் நாலாப்பக்கம் வரும்.

அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்

கன்னி

உறவினர்களால் நன்மை உண்டாகும். தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். அண்டை வீட்டாரிடம் நட்பு பலப்படும்.வேலைக்கு செல்பவர்களுக்கு உத்யோகத்தில் வேலை பளு குறையும். ஆரோக்கியம் மேம்படும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள்.

அதிர்ஷ்டநிறம் : ரோஸ்

துலாம்

வீட்டில் பெரியவர்களின் ஆலோசனை கிடைக்கும். அது தங்களுக்கு சில முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உதவிகரமாக அமையும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். உடல் நலத்தில் கவனம் செலுத்தக்கூடும். மருத்துவ செலவு உண்டு. உறவினர் உதவுவர்.

அதிர்ஷ்டநிறம் : கிளிப்பச்சை

விருச்சிகம்

மனைவி வீட்டாரிடம் நல்லுறவு ஏற்படும்.தம்பதிகளின் அன்யோன்யம் மிகும். நண்பர்களுடன் சுற்றுலா செல்வீர்கள்.

சுப காரியம் கைகூடும். ஆவணங்களை பத்திரப்டுத்துவீர்கள். கையிருப்பு அதிகரிக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழில் சிறப்படையும்.

அதிர்ஷ்டநிறம் : சாம்பல்

தனுசு

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைக்கும். பொதுத் துறையில் இருப்பவருக்கு தங்கள் சொல்லிற்கு மதிப்புக் கூடும். வியாபாரத்திற்கு வங்கிக்கடன் கிடைக்கும். ஆன்மீகப் பணிகள் சிறக்கும். தீர்க்க யாத்திரை செல்வதற்கு திட்டமிடுவர்.

அதிர்ஷ்டநிறம் : வெள்ளை

மகரம்

உத்யோகஸ்தர்ளுக்கு தன் கீழ் உள்ள பணியாளர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கூடும். வெளி நாட்டு நண்பர்கள் தங்களுக்கு உதவுவர். பெற்றோர்களின் உடல் நலம் சிறக்கும். மறுமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.

அதிர்ஷ்டநிறம் : கிரே

கும்பம்

வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட கூடுதல் முயற்சி அவசியம். ஆரோக்கியம் மேம்படும். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை. பெண்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். தம்பதிகளிடத்தில் நல்ல புரிதல் உண்டாகும்.

அதிர்ஷ்டநிறம் : ஊதா

மீனம்

திடீர் பணவரவு உண்டு. குடும்பத்தில் வெளிநபரின் தலையீடு வேண்டாம். வியாபாரத்தில் தங்கள் மனைவி ஒத்துழைப்பார். வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும். விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி விற்பனையைக் கூட்டுவர்.

அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்





Next Story