படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் லெஜண்ட் சரவணன்.. வைரலாகும் புகைப்படங்கள்


லெஜண்ட் சரவணனின் இரண்டாவது படத்தில், உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடித்த தி லெஜண்ட் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தற்போது, இரண்டாவது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

தொழிலதிபரான லெஜண்ட் சரவணன் தன்னுடைய கடையின் விளம்பரத்தில் அவரே நடித்தார். இந்த விளம்பர வீடியோக்களில் கலர் கலராக உடை அணிந்து கொண்டு, நடிகை தமன்னா, ஹன்சிகா மோத்வானி என பல முன்னணி நடிகைகளுடன் நடனம் ஆடியிருந்தார். இதற்கு இணையத்தில் மிகப்பெரிய அளவில் விமர்சனம் வந்தபோதும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து தன்னுடைய கடையின் விளம்பரத்திற்கு இவரே மாடலாக நடித்து வந்தார்.

தி லெஜண்ட்:

இதை தொடர்ந்து இயக்குனர்கள் ஜெர்ரி & ஜெடி இயக்கத்தில் தி லெஜண்ட் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியானது.

இந்த பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட லெஜண்ட் சரவணன். அந்தந்த ஊரில் அந்தந்த மொழியில் பேசி ரசிகர்களை தன் வசப்படுத்தினார். இந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றன.

உண்மை சம்பவம்:

தி லெஜண்ட் படத்தை தொடர்ந்து, எதிர்நீச்சல், கொடி, பட்டாசு, கருடன் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா, நடிகர் சாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக இருவர் உள்ளம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பாயல் ராஜ்புத் நாயகியாக நடித்து வருகிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கான பூஜை செப்டம்பர் மாதம் போடப்பட்டு, தூத்துக்குடியில் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.


Next Story