ஜோயாலுக்காஸ் நிறுவனத்துடன் SPR நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்..!


ஜோயாலுக்காஸ் நிறுவனத்துடன் SPR நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்..!
x
தினத்தந்தி 13 Dec 2024 6:25 PM IST (Updated: 13 Dec 2024 7:48 PM IST)
t-max-icont-min-icon

சென்னையின் மிகப்பெரிய ஒருங்கிணைக்கப்பட்ட டவுன்ஷிப்பான SPR சிட்டி இன்று இந்தியாவின் மிகப்பெரிய ஜூவல்லரி செயின் நிறுவனமான ஜோயாலுக்காஸ் உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளதை அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தமானது இந்த இரு நிறுவனங்களின் அலுவலர்கள் மற்றும் விருந்தினர்கள் முன்னிலையில் இன்று கையெழுத்திடப்பட்டது. இதன் மூலம் SPR சிட்டியில் 20000 சதுர அடிக்கும் மேற்பட்ட பரப்பில் ஒரு ஷோரூமை அமைத்த முதல் ஜூவல்லரி நிறுவனம் என்ற பெருமையை ஜோயாலுக்காஸ் பெறுகிறது.

SPR சிட்டி சென்னையின் மிகப்பெரிய ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு டவுன்ஷிப் ஆகும். இதில் மிக உயரமான சென்னையின் குடியிருப்பு கோபுரங்கள், பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பங்களாக்கள் மற்றும் ஸ்ரீராம் யூனிவர்சல் ஸ்கூல் போன்றவை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SPR இந்தியாவின் மேலாண்மை இயக்குநர் திரு.ஹித்தேஷ் கவாத் அவர்கள் கூறும்போது, 'ஜோயாலுக்காஸ் நிறுவனம் அவர்களது ஷோரூம் உடன் எங்கள் வளாகத்தில் பிரவேசிப்பதை SPR -ல் உள்ள நாங்கள் மிகவும் பெருமையாகக் கருதுகிறோம். ஜோயாலுக்காஸ் இந்தியாவின் மிகவும் பிரபலமானதொரு ஜூவல்லரி குழுமமாக இருப்பதோடு SPR சிட்டியில் ஒரு ஷோரூமை அமைக்கும் முதல் ஜூவல்லரி நிறுவனமாகவும் இது திகழ்கிறது. இதன் மூலம் SPR சிட்டிக்குள் மிகச்சிறந்த வசதிகள் மற்றும் சில்லறை விற்பனை மையங்களையும் அமைத்தளிப்பதற்கான உறுதிப்பாட்டினை செவ்வனே நிறைவேற்றியுள்ளோம் என நம்புகிறோம்'' என்றார்.

மார்க்கெட் ஆஃப் இந்தியா டிரேட் ஆர்கனைசேஷன், தமிழ்நாடு என்ற அமைப்பின் துவக்க விழாவில் திரு.ஹித்தேஷ் பேசும்போது, ''சமூகத்திற்கு பிரதிபலனாக நாங்கள் எப்போதுமே சேவை அளிப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம், இவ்வகையில், NGO ஒன்றை நிறுவியபோது, அதன் மூலம் உணவு, உடை அல்லது உறைவிட போன்ற தற்காலிக வசதிகள் அல்லாமல் அதனைவிட முக்கியமான ஒன்றை அளிக்க முற்பட்டோம். இந்த சமுதாயத்தில் வேலைவாய்ப்பினை எதிர்நோக்கி மட்டும் இல்லாமல் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தியளிக்கும் ஒரு தலைமுறையை உருவாக்கியளிக்க எங்கள் NGO செயலாற்றவேண்டும் என முடிவெடுத்தோம். மார்க்கெட் ஆஃப் இந்தியா டிரேட் ஆர்கனைசேஷன், தமிழ்நாடு அமைப்பானது ஆர்வமுள்ள வணிகர்கள் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைவதுடன் மட்டுமின்றி இனிவரும் எதிர்கால சந்ததியினரும் அதன் மூலம் பலனடைந்து வளர்ச்சி காணும் வகையில் அவர்களுக்கு அதிகாரமளிக்கும். எங்கள் அமைப்பிலுள்ள சிறு வணிகர்களுக்கு கீழ்க்கண்டவற்றை அளிக்க திட்டமிட்டுள்ளோம்.

  • பயிற்சி மற்றும் மேம்பாடு
  • அரசு கொள்கைகள், திட்டங்கள் மற்றும் வங்கி வசதி ஆகியவை குறித்த விழிப்புணர்வு
  • எதிர்கால வணிகத்திற்கான விவரங்களை வெளியிடுதல்
  • நெட்வொர்க்கிங் நிகழ்வுகளை நடத்துதல்
  • வணிக ஏடுகள் மற்றும் இதழ்கள்

இந்த உண்மை விபரங்கள் மார்க்கெட் ஆஃப் இந்தியா உடன் இணைந்து இந்த தளத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி முறைசார்ந்த வணிகத்தை செயல்படுத்த தூண்டுகோலாக அமையும் ''.

ஜோயாலுக்காஸ் குழுமத்தின் தலைவர், திரு . ஜோய் ஆலுக்காஸ் அவர்கள் கூறும்போது, ''SPR சிட்டியில் பங்கேற்கும் முதல் ஜூவல்லர் என்ற வகையில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். இங்கு வணிகத்திற்கான ஆற்றல் உள்ளதை உணர்கிறேன். இங்கு எங்கள் ஷோரூம் சிறப்பாக செயல்படும் எனவும் நம்புகிறேன். சென்னை நகரம் ஜோயாலுக்காஸ் நிறுவனத்திற்கு ஓர் சிறந்த இடமாக இருந்து வருகிறது. இந்நகரத்தில் எங்கள் ஸ்டோர்களை படிப்படியாக உயர்த்தும் திட்டத்தையும் கொண்டுள்ளோம். SPR சிட்டியானது ஏராளமான உத்தரவாதமும் வாய்ப்புகளும் உள்ள ஒரு பெரிய திட்டமாகும். இதில் ஒர் அங்கமாகத் திகழ்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்'' என்றார்.

மேலும், SPR சிட்டியில் இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை மற்றும் முழுவிற்பனை அங்காடியும் அமைந்துள்ளது. மார்கெட் ஆஃப் இந்தியாவில் 5000-க்கும் மேற்பட்ட கடைகள், 10000 வாகனங்களை நிறுத்துவதற்கான வசதி, 9 பிரதானமான முழு விற்பனை மற்றும் சில்லறை விற்பனை சந்தை, 1.5 ஏக்கரில் மிகப்பரந்த மையமான முற்ற வெளி (ATRIUM) மற்றும் சிறிய அளவிலான முற்றவெளிகள் ஆகியவை இருப்பதால் சென்னையில் முறைசார்ந்த வணிகத்திற்கான புரட்சியை இது ஏற்படுத்தும் என நம்பலாம்.

SPR இந்தியாவைப் பற்றி

SPR இந்தியா நிறுவனம், குடியிருப்பு மற்றும் வர்த்தக கட்டுமானத் திட்டங்களைப் கையகப்படுத்தி மேம்படுத்துவதற்காக 1972ஆம் ஆண்டு முதல் சென்னையில் இயங்கும் ஒரு முன்னணி ரியல் எஸ்டேட் டெவலப்பர் நிறுவனமாகும். 50 ஆண்டுகளுக்கும் மேல் கட்டுமானத் துறையில் புதுமைக்கு பெயர் போன SPR இந்தியா பல புதிய நுட்பங்களுடன் பல திட்டங்களை மேற்கொண்டு நிறைவேற்றியுள்ளது. இவர்கள் சென்னையில் LIC கட்டடத்திற்குப் பிறகு மிகவும் உயரமான கட்டடமான ஓஷியான் ஹைட்ஸ் என்ற கட்டடத்தை 2012ல் கட்டமைத்தனர். மிகப்பிரம்மாண்டமான 11 கோபுரங்களுடன் ஒன்றுக்கொன்று இணைந்த ஸ்கை வாக் வசதி மற்றும் மேல்மாடி நிலப்பாங்கான அமைப்பு ஆகியவற்றுடன் கூடிய ஓஷியன் குளோரோஃபில் என்ற கட்டடத்தை SPR இந்தியா வடிவமைத்தது. தற்போது SPR இந்தியா, சென்னை பெரம்பூரில் தமிழ்நாட்டிலேயே மிகவும் உயரமான குடியிருப்பு கோபுரத்தை 48 மாடிகளுடன் கட்டமைத்து வருகிறது.

மேலும், SPR சிட்டியில் இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை மற்றும் முழுவிற்பனை அங்காடியும் அமைந்துள்ளது. மார்கெட் ஆஃப் இந்தியாவில் 5000-க்கும் மேற்பட்ட கடைகள், 10000 வாகனங்களை நிறுத்துவதற்கான வசதி, 9 பிரதானமான முழு விற்பனை மற்றும் சில்லறை விற்பனை சந்தை, 1.5 ஏக்கரில் மிகப்பரந்த மையமான முற்ற வெளி (ATRIUM) மற்றும் சிறிய அளவிலான முற்றவெளிகள் ஆகியவை இருப்பதால் சென்னையில் முறைசார்ந்த வணிகத்திற்கான புரட்சியை இது ஏற்படுத்தும் என நம்பலாம்.

18 கிமீ நீளமான வணிக நடைகூடத்தைத் கொண்ட மார்க்கெட் ஆஃப் இந்தியா நிறுவனமானது,வர்த்தக பரிவர்த்தனைகள் மற்றும் வணிக செயல்பாடுகளை சீர்படுத்துவதற்கான ஓர் தனித்துவமான, மைய சந்தையிடமாகத் திகழ்கிறது. மார்க்கெட் ஆஃப் இந்தியா அனைத்து மாதிரி வணிகங்களையும் ஒரே கூரையின் கீழ் முதன்முறையாக கொணர்ந்தளிக்கிறது. இந்த மையம் வர்த்தக வளர்ச்சிக்காக மட்டுமின்றி, மாற்றத்தை அளிக்கும் ஓர் ஆற்றலாகவும், நகரத்தின் பொருளாதார எதிர்காலத்தை மீண்டும் வடிவமைத்து ஒரு முக்கியமான வணிக மையமாக அதனை உயர்த்திக்கொள்வதற்கான ஓர் பிரதான அமைவிடமாகவும் திகழ்கிறது.

(இடமிருந்து வலம்) ராஜேஷ் கிருஷ்ணன், ஹென்றி ஜார்ஜ், ஜோய் ஆலுக்காஸ், ஹித்தேஷ் கவாத், சேத்தன் போஹ்ரா,  நவீன் ரங்க்கா, பங்கஜ் ஓஜா, சுரபாஹி கவாத்


Next Story