இன்றைய ராசிபலன் - 14.01.2025
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய பஞ்சாங்கம்:-
குரோதி வருடம் தை மாதம் 1-ம் தேதி செவ்வாய்க்கிழமை
நட்சத்திரம்: இன்று மாலை 11.24 வரை புனர்பூசம் பின்பு பூசம்
திதி: இன்று அதிகாலை 04.40 வரை பௌர்ணமி பின்பு பிரதமை
யோகம்: சித்த யோகம்
நல்ல நேரம் காலை: 10.30 - 11.30
நல்ல நேரம் மாலை: 4.30 - 5.30
ராகு காலம் மாலை: 03.00 - 04.30
எமகண்டம் காலை: 09.00 - 10.30
குளிகை மாலை: 12.00 - 1.30
கௌரி நல்ல நேரம் காலை: 10.30 - 11.30
கௌரி நல்ல நேரம் மாலை: 7.30 - 8.30
சூலம்: வடக்கு
சந்திராஷ்டம்: கேட்டை, மூலம்
ராசிபலன்:-
மேஷம்
அரசாஙகத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. காதலர்கள் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. தங்கள் மகன் இன்னும் நிரந்தரமான வருவாய் அமைய வில்லை என்று ஏங்கிய பெற்றோர்களுக்கு மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
ரிஷபம்
பெண்கள் தங்கள் குடும்ப விசயத்தை வெளியிடாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் சம்பள உயர்வும் பதவி உயர்வும் கிட்டும். மேலதிகாரிகள் மத்தியில் உங்களுக்கு நல்ல மரியாதை இருக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதுச் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
மிதுனம்
விருந்தினர்களின் வருகையால் செலவுகள் அதிகமாகும். தொலைக்காட்சி வானொலி விளம்பரங்களின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். தொழில் ரகசியங்கள் வெளியில் கசியாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கடகம்
வேலைக்கு செல்பவர்ள் தங்கள் அலுவலகத்தில் அநாவசியப் பேச்சை நிறுத்தி விடுவது தங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். பயணங்களும் அதிகரிக்கும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும். உங்களுடைய ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். பழைய பிரச்னைகளை தீர்க்க வழி வகை பிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
சிம்மம்
உறவினர்கள் வருகை உண்டு. தம்பதிகளிடையே அன்பு பலப்படும். எதிர்பார்த்த புதிய வேலை கிடைக்கும். மனைவியின் ஆலோசனையை கேட்டு நடப்பர். வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவர். விவேகமுடன் செயல்பட்டு வெற்றியைக் குவிப்பீர்கள். திருமண விசயத்தில் உறவினர் ஒத்துழைப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
கன்னி
தேக ஆரோக்கியம் மேம்படும். உங்கள் உறவினர்களால் பெரிதும் மதிக்கப்படுவர். செலவு கூடுதலாகும். சிக்கனம் தேவை. வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகும். அசாத்தியமான விசயங்களை சட்டென்று முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
துலாம்
மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு கூடுதல் சம்பளம் கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் நட்பு கிடைக்கும். நல்ல காரியத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு விரும்பிய பதவி கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
விருச்சிகம்
கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் இருப்பதால் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
தனுசு
மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் இருப்பதால் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
மகரம்
மாணவர்கள் திட்டமிட்டுப் படித்து முடிப்பர். புத்திரர்களால் சிறு பிரச்னைகள் வந்து நீங்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகம் இருக்கும். மனதில் மகிழ்ச்சி பொங்கும். பணவரவு நன்றாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
கும்பம்
தாயின் தேவையை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். பெண்களுக்கு, வீட்டுச்செலவுக்கு தட்டுப்பாடு வரலாம். சிக்கனம் தேவை. சொத்து ஆவணங்களை பிறர் பொறுப்பில் கொடுக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
மீனம்
வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். உடல்நிலையில் சிறு பாதிப்பு வரலாம். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். கணவன், மனைவி ஒற்றுமையாக நடந்து கொள்வர். உத்யோகஸ்தர்கள், நிர்வாகத்தை அனுசரித்து சென்றால் பிரச்சினை வர வாய்ப்பில்லை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை