இன்றைய ராசிபலன் - 25.12.2024


இன்றைய ராசிபலன் - 25.12.2024
x

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

குரோதி வருடம் மார்கழி மாதம் 10-ம் தேதி புதன்கிழமை

நட்சத்திரம்: இன்று மாலை 4-22 வரை சித்திரை பின்பு சுவாதி

திதி: இன்று இரவு 11-02 வரை தசமி பின்பு ஏகாதசி

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 9.15 - 10.15

நல்ல நேரம் மாலை: 4.45 - 5.45

ராகு காலம் மாலை: 12.00 - 1.30

எமகண்டம் காலை: 7.30 - 9.00

குளிகை காலை: 10.30 - 12.00

கௌரி நல்ல நேரம் காலை: 10.45 - 11.45

கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 - 7.30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டம் :சதயம், பூரட்டாதி

ராசிபலன்:-

மேஷம்

பணம் இரு வழியில் வரும். புதுத்தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். வியாபாரம் சுமாராக இருக்கும். உணவில் எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

ரிஷபம்

உடன்பிறந்தோர் உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முற்படுவார்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கனவுத் தொல்லை நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மிதுனம்

தம்பதிகள் ஒற்றுமையுடன் இருப்பர். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் அமைதி நிலவும். வெளிநாட்டுத் தொடர்புகள் அதிகரிக்கும். பணம் தேவைக்கு வந்து கொண்டிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கடகம்

எதிர்பார்ப்புகள் ஈடேறும். பிள்ளைகளின் புது முயற்சிகள் வெற்றி பெறும். உத்யோகத்தில் வேலை பளு அதிகம் இருக்கும். கலைஞர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாகனம் ஓட்டும் போது கவனமுடன் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

சிம்மம்

புதிய நண்பர்கள் கிடைப்பர். அவர்கள் தங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவர். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். ஆரோக்கியத்தில் பிரச்சினை இல்லை. திருமணம் பற்றிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக இருக்கும். பணவரவில் பஞ்சமில்லை. காதல் கசக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கன்னி

மேலதிகாரிகளிடம் வாக்குவாதத்தை தவிருங்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் கையாள்வீர்கள். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மார்கெட்டிங் பிரிவினருக்கு ஆர்டர்கள் குவியும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

துலாம்

உடன் பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகள் நன்கு படிப்பர். வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் லாபத்தை காண்பீர்கள். வாகனம் ஓட்டும் போது விவேகத்தை வளப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

விருச்சிகம்

தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும்.பிள்ளைகளால் நன்மை உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். வேற்றுமதத்தவர் உதவுவார்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

தனுசு

காதல் விவகாரத்தில் அவசரம் வேண்டாம்.தாமதமாக நடந்த வேலைகள் நல்லபடியாக முடியும். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மகரம்

வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களுக்கு உதவுவர். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். புதுமைகள் படைக்கும் வாரம். நட்பால் ஆதாயம் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கும்பம்

சதயம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் மட்டும் சந்திராஷ்டமம் இருப்பதால் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

மீனம்

தாய் வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் குறையும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை


Next Story