'காதலே காதலே' படத்தின் 'ஆசை' பாடலை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்


G.V. Prakash releases the song Aasai from the movie Kaadale Kaadale
x

'காதலே காதலே' படத்தின் ஆசை பாடல் வெளியாகி உள்ளது.

சென்னை,

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் மஹத். இவர் 'மங்காத்தா, ஜில்லா, சென்னை 600028 - 2, மாநாடு' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது 'காதலே காதலே' எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார், விடிவி கணேஷ், ரவீனா ரவி உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் முழுக்க முழுக்க காதல் மற்றும் பொழுது போக்கு அம்சத்துடன் இக்காலத்து இளைஞர்களின் காதலையும் அவர்கள் ஒரு உறவை எப்படி அணுகுகிறார்கள் என்பதை குறித்த படமாக உருவாகியுள்ளது.

இந்நிலையில் படத்தின் 'ஆசை' பாடல் வெளியாகி உள்ளது. இதனை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.


Next Story