ராம் சரணின் 'ஆர்.சி 16' - வெளியான முக்கிய தகவல்


Important information about the release of Ram Charans RC 16
x
தினத்தந்தி 14 Jan 2025 1:27 PM IST (Updated: 14 Jan 2025 1:28 PM IST)
t-max-icont-min-icon

ராம் சரண் தனது 16-வது படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் தனது 16-வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ஆர்.சி 16 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார்.

ராம் சரணுடன் ஜான்விகபூர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இயக்குனர் புச்சி பாபு இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தை விஜயதசமி அன்று (அக்.2)வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், ராம் சரண் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள 'கேம் சேஞ்சர்' படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story