சரத் குமார் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது


Sarath Kumars new film has been announced
x

சரத் குமாரின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சரத்குமார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன், போர் தொழில், பரம் பொருள்' ஆகிய திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தன.

தனது 150-வது படத்தில் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடித்துள்ளார். 'தி ஸ்மைல் மேன்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் கடந்த மாதம் 27-ம் தேதி வெளியானது. இந்த படத்தில் சரத்குமாருடன் சிஜா ரோஸ், இனியா, ஜார்ஜ் மர்யான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இவரது அடுத்த படத்திற்கான அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. அதன்படி, அகில் எம் போஸ் இயக்கத்தில் சரத் குமார் தனது புதிய படத்தில் நடிக்க உள்ளார். 'ஏழாம் இரவில்' என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் டைட்டில் போஸ்டரை பகிர்ந்து, படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


Next Story