மீண்டும் வருகிறார் 'கஜினி'


Suriyas Ghajini gears up for a re-release in Kerala
x
தினத்தந்தி 27 May 2024 12:00 PM GMT (Updated: 27 May 2024 1:05 PM GMT)

'கஜினி' திரைப்படம் ரீ-ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து 2005-ல் வெளியான படம் கஜினி. இப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் நாயகிகளாக அசின், நயன்தாரா ஆகியோர் நடித்து இருந்தனர்.

இந்த படம் இந்தியில் அமீர்கான் நடிக்க ரீமேக் ஆகி அங்கும் வசூலில் சக்கைப்போடு போட்டது. இந்நிலையில் கஜினி திரைப்படம் கேரளாவில் ரீ-ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் அடுத்த மாதம் 7-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சூர்யா 'கங்குவா' படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அதனைத்தொடர்ந்து சூர்யாவின் 44- வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story