பொங்கலுக்கு வெளியாகும் தருணம் திரைப்படம்


பொங்கலுக்கு வெளியாகும் தருணம் திரைப்படம்
x
தினத்தந்தி 29 Nov 2024 9:57 PM IST (Updated: 29 Nov 2024 9:58 PM IST)
t-max-icont-min-icon

கிஷன் தாஸ் மற்றும் ஸ்ம்ருதி கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர்.

சென்னை.

'தேஜாவு' படத்தின் இயக்குனர் அரவிந்த் பஸ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தருணம்'. கிஷன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார். ஜென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் தயாரிக்கும் இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார்.

மேலும் இந்த படத்தில் பால சரவணன், ராஜ் அய்யப்பன், கீதா கைலாசம், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜா பட்டார்ஜி ஒளிப்பதிவாளராகவும், அருள் சித்தார்த் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ள இப்படத்திற்க்கு தர்புகா சிவா பாடல்களுக்கான இசையும், அஸ்வின் ஹேமந்த் பிண்ணனி இசையும் மேற்கொண்டுள்ளனர்.

தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது வரும் 2025 பொங்கல் வெளியீடாக இப்படம் வெளியிடவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.


Next Story