வைரலாகும் 'தி ராஜா சாப்' படத்தின் போஸ்டர்


The poster of the film The Raja Saab goes viral
x

பிரபாசின் போஸ்டர் வெளியிட்டு தி ராஜா சாப் படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

சென்னை,

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவந்த பிரபாஸ், 'பாகுபலி' படத்தின் மூலம் பான் இந்தியா அளவில் பிரபலமானார். பின்னர் இவரது நடிப்பில் வெளியான 'சலார் மற்றும் கல்கி 2898 ஏ.டி' படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களான அமைந்தன. அதனை தொடர்ந்து தற்போது, மாருதி இயக்கத்தில் ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகும் 'தி ராஜா சாப்' படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

பீப்பிள் மீடியா பேக்டரி மற்றும் ஜிஎஸ்கே மீடியா ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தினை தயாரிக்கிறது. தமன் இசையமைக்கும் இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுநிலையில், பிரபாசின் போஸ்டர் வெளியிட்டு அதற்கு தி ராஜா சாப் படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story