இணைப்பு கால்வாய் தூர்வாரும் பணி


இணைப்பு கால்வாய் தூர்வாரும் பணி
x

வில்லியனூர் திருக்காஞ்சி பகுதியில் கால்வாய் தூர்வாரும் பணியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

வில்லியனூர்

வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் மங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருக்காஞ்சி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சத்து 32 ஆயிரம் செலவில் இணைப்பு கால்வாய் தூர்வாரும் பணியும், மங்கலம் கிராமத்தில், ரூ.12 லட்சத்து 61 ஆயிரம் செலவில் படாங்குசெட்டி வாய்க்கால் தூர்வாரும் பணியும், ரூ.33 லட்சத்து 72 ஆயிரம் செலவில் சங்கராபரணி ஆற்றின் மேற்கு கரையை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கான தொடக்க விழா நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ.வும் வேளாண்துறை அமைச்சருமான தேனீ. ஜெயக்குமார் கலந்துகொண்டு பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அங்கு கால்வாய் தூர்வாரும் 100 நாள் வேலை திட்ட பெண் தொழிலாளர்களுடன் அவர் கலந்துரையாடினார். பணிகளை பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றும், உரிய உபகரணங்களை கொண்டு பணி செய்திட வேண்டும் எனவும் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story