ரவுடி உள்பட 4 பேருக்கு ஜெயில்


ரவுடி உள்பட 4 பேருக்கு ஜெயில்
x

சினிமா தியேட்டரில் பெண்ணிடம் அத்துமீறிய ரவுடி உள்பட 4 பேைர போலீசாா் சிைற அடைத்தனா்.

புதுச்சேரி

புதுவை அண்ணா சாலையில் உள்ள சினிமா தியேட்டரில் கடந்த 2015-ம் ஆண்டு பெண் ஒருவர், அவரது கணவருடன் படம் பார்க்க சென்றார். அப்போது அங்கிருந்த 4 பேர் அந்த பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டனர். இதனை தட்டிக்கேட்ட அவரது கணவருக்கும் மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து டி.வி. நகரை சேர்ந்த ரவுடி நடராஜன் (வயது46), சிலம்பு (30), அலைஸ் (36), அங்கப்பன் (60) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மோகன் முன்னிலையில் நடந்து வந்தது. விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரமும், சிலம்பு, அலைஸ், அங்கப்பன் ஆகியோருக்கு 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பிரவீன்குமார் ஆஜராகி வாதாடினார்.


Next Story