இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 14-12-2024
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 14 Dec 2024 12:31 PM IST
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு; தமிழக உரிமைகளை திமுக அரசு தாரைவார்த்து விட்டது-அன்புமணி ராமதாஸ்
- 14 Dec 2024 12:29 PM IST
வி.சி.க. தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
காங்கிரஸ் பேரியக்கத்தின் சட்டமன்ற உறுப்பினரும் மேனாள் இந்திய ஒன்றிய அமைச்சருமான அண்ணன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மறைவு பெருந்துயரத்தை அளிக்கிறது.
- 14 Dec 2024 12:29 PM IST
தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூத்த தலைவர் திரு.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
- 14 Dec 2024 11:29 AM IST
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்
மருத்துவமனை சிகிச்சை பெற்றுவந்தநிலையில், சிகிச்சை பலனின்றி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (75) இன்று காலை 10:12 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் மணப்பாக்கத்தில் உள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இல்லத்தில் அவரது உடலுக்கு உறவினர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். தொடர்ந்து காங்கிரஸ் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல் நாளை தொண்டர்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஈவிகேஎஸ். இளங்கோவன் மறைவு தொடர்பாக, மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்கள் 13 நவம்பர் 2024 அன்று அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பணியாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் அவர் இன்று (14 டிசம்பர் 2024) காலமானார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 14 Dec 2024 11:04 AM IST
மழை, வெள்ளம்: திருச்செந்தூருக்கு 2 நாட்கள் செல்ல வேண்டாம் - கலெக்டர் அறிவுறுத்தல்
திருச்செந்தூர் செல்லும் சாலைகளில் வெள்ள நீர் செல்வதால் வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வதை பக்தர்கள் 2 நாட்கள் தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.