மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது
புயல் முழுமையாக கரையை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Live Updates
- 30 Nov 2024 8:18 AM IST
சென்னை - ஆர்ப்பரிக்கும் கடல்
சென்னை மெரினா உள்ளிட்ட கடற்பகுதிகள் கொந்தளிப்புடன் ஆர்ப்பரிக்கின்றன. பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பம், திருவான்மியூர், நீலங்கரை கடற்பகுதிகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. 10 அடி உயரத்திற்கு மேல் அலைகள் எழும்புவதால் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
- 30 Nov 2024 8:06 AM IST
சென்னையில் இன்று மாநகர் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கி வருகிறது. கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓஎம்ஆர் சாலையில் பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
- 30 Nov 2024 8:05 AM IST
சென்னையில் காற்றுடன் மழை பெய்துவரும் நிலையில் புறநகர் மின்சார ரெயில்கள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன.
- 30 Nov 2024 7:50 AM IST
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. பெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கையாக மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
- 30 Nov 2024 7:45 AM IST
சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் அணிவகுத்து நிற்கும் கார்கள்
புயல், மழையில் இருந்து கார்களை பாதுகாக்க மேம்பாலங்களில் உரிமையாளர்கள் கார்களை நிறுத்தி வைக்கின்றனர். அந்தவகையில் வேளச்சேரியின் இரண்டு மேம்பாலங்கள் மீதும் கார்களை நிறுத்தி வரும் வேளச்சேரி மக்கள். புயல் காரணமாக சென்னைக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- 30 Nov 2024 7:31 AM IST
சென்னையில் அதிகபட்சமாக கத்திவாக்கத்தில் 7 செ.மீ. மழைப்பதிவு
திருவொற்றியூர் - 5 செ.மீ, தண்டையார்பேட்டை - 4.6 செ.மீ., மணலி 4.2 செ.மீ மழைப்பதிவு; சென்னையில் சராசரியாக 3.45 செ.மீ. மழைப்பதிவு
- 30 Nov 2024 7:19 AM IST
விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம்
சென்னைக்கு வந்த 4 விமானங்கள் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கின்றன. புனே, குவைத், மஸ்கட், மும்பையில் இருந்து சென்னை வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் உள்ளன. சென்னையில் காற்றுடன் பலத்த மழை பெய்வதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
- 30 Nov 2024 7:17 AM IST
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 449 கன அடி நீர்வரத்து உள்ளது.
- 30 Nov 2024 7:16 AM IST
பெஞ்சல் புயல் கரையை கடக்க தாமதமாகும்?
பெஞ்சல் புயல் கரையை கடக்க தாமதமாகும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறியுள்ளார். வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள பெஞ்சல் புயல் கடந்த சில மணி நேரங்களாக 7 கி.மீ வேகத்தில் நகர்கிறது என்று தெரிவித்துள்ளார்.