வங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம்


வங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம்
x
தினத்தந்தி 27 Nov 2024 11:00 AM IST (Updated: 27 Nov 2024 9:05 PM IST)
t-max-icont-min-icon

வங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சென்னை
சென்னை,

Live Updates

  • 27 Nov 2024 2:46 PM IST

    கனமழை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை

    ஸ்ரீவில்லிபுத்தூரில் கனமழை பெய்து வருவதால் சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. நாளை கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு நடைபெறும் நிலையில் மழை காரணமாக பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • 27 Nov 2024 2:46 PM IST

    வேதாரண்யம் பகுதியில் 2வது நாளாக மழை



    நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் 2வது நாளாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வர் கோவிலில் உள்பகுதி மற்றும் வெளிப்பிரகாரங்களில் மழை நீர் தேங்கி உள்ளது.

  • 27 Nov 2024 2:24 PM IST

    காரைக்காலில் கனமழை - பயிர்கள் சேதம்

    காரைக்காலில் தொடர் கனமழையால் திருநள்ளார், கோட்டுச்சேரி, நெடுங்காடு உள்ளிட்ட பகுதிகளில் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. 5 நாட்களுக்கு மேல் பயிர்கள் நீரில் மூழ்கி இருந்தால் பயிர்கள் அழுகிவிடும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

  • 27 Nov 2024 2:19 PM IST

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் கடல் சீற்றத்தால் மிதவை கப்பல் சேதம் அடைந்தது. பாம்பன் ரெயில் பாலத்திற்கான கட்டுமான பணிக்கு பயன்படுத்திய மிதவை கப்பல் சேதமடைந்துள்ளது. மண்டபம் பகுதியில் சுமார் 5 அடி உயரத்திற்கு கடல் எழும்புகிறது.

  • 27 Nov 2024 2:10 PM IST

    புயல் சின்னத்தின் வேகம் குறைந்தது - வானிலை ஆய்வு மையம் தகவல்


    வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை 5.30 மணிக்கு பெங்கல் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது தென் கிழக்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் 13 கி.மீ-ல் இருந்து 10 கி.மீ.ஆக குறைந்துள்ளது.

    இன்று மாலை உருவாக உள்ள பெங்கல் புயல் நாகைக்கு தென்கிழக்கே 350 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 450 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு - தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • 27 Nov 2024 2:00 PM IST

    எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: ஆரஞ்சு அலர்ட் - வெளியான தகவல்



    4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

    திருவாரூர்,

    கடலூர்,

    மயிலாடுதுறை,

    நாகப்பட்டினம்.

    6 மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு அலர்ட்

    காஞ்சிபுரம்,

    செங்கல்பட்டு,

    விழுப்புரம்,

    அரியலூர்,

    தஞ்சை,

    புதுக்கோட்டை.

    இன்று 10 மாவட்டங்களில் கனமழை

    சென்னை,

    திருவள்ளூர்,

    ராணிப்பேட்டை,

    திருவண்ணாமலை,

    திருச்சி,

    கள்ளக்குறிச்சி,

    பெரம்பலூர்,

    சிவகங்கை,

    ராமநாதபுரம்,

    தூத்துக்குடி

    4 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்

    காஞ்சிபுரம்,

    செங்கல்பட்டு,

    விழுப்புரம்,

    கடலூர்

    நாளை 12 மாவட்டங்களில் கனமழை

    சென்னை,

    திருவள்ளூர்,

    ராணிபேட்டை,

    கள்ளக்குறிச்சி,

    பெரம்பலூர்,

    அரியலூர்,

    புதுக்கோட்டை,

    திருவண்ணாமலை,

    தஞ்சாவூர்,

    திருவாரூர்,

    நாகப்பட்டினம்,

    மயிலாடுதுறை

    நவம்பர் 29 மற்றும் 30ம் தேதி

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

  • 27 Nov 2024 1:44 PM IST

    தமிழகத்தை நெருங்கும் புயல் சின்னம்

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பு:

    கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கில் 530 கி.மீ. தொலைவில் மையம்கொண்டுள்ளது.

    திருகோணமலைக்கு கிழக்கே சுமார் 110 கி.மீ., நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கில் 350 கி.மீ, புதுச்சேரிக்கு தென்கிழக்கே 450 கி.மீ. தொலைவில் உள்ளது.

    இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் சூறாவளி புயலாக வலுவடைய வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு, தொடர்ந்து 2 நாட்களுக்கு வடக்கு-வடமேற்கு திசையில் தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகர்ந்து பின்னர் இலங்கை கடற்கரையை நோக்கி நகரும்.

    இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • 27 Nov 2024 1:27 PM IST

    3.7 மீட்டர் வரை கடல் அலை எழும்:.. வானிலை மையம் எச்சரிக்கை

    பெங்கல் புயல் காரணமாக கடலூர், காஞ்சிபுரம், காரைக்கால், புதுச்சேரி, நாகப்பட்டினம் வடக்கு, நாகப்பட்டினம் தெற்கு, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் கடல் அலைகள் 3.1 மீட்டர் முதல் 3.7 மீட்டர் வரை எழக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

  • 27 Nov 2024 1:16 PM IST

    கனமழை காரணமாக, மயிலாடுதுறையில் பழைய வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.

     

  • 27 Nov 2024 12:49 PM IST

    மயிலாடுதுறையின் தரங்கம்பாடிக்கு தமிழக பேரிடர் மீட்பு படை வந்து சேர்ந்துள்ளது. பைபர் படகு, கயிறு, மண்வெட்டி உள்ளிட்ட மீட்பு கருவிகளுடன் 30 பேர் கொண்ட மீட்பு குழுவினர் வருகை தந்துள்ளனர். தரங்கம்பாடியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், வெள்ளத்தில் சிக்கும் மக்கள் மற்றும் கால்நடைகளை மீட்பதற்கான பணிக்காக இந்த மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்படுவார்கள்.


Next Story