சிங்கப்பூர் பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு


சிங்கப்பூர் பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு
x
தினத்தந்தி 5 Sep 2024 2:36 AM GMT (Updated: 5 Sep 2024 6:22 AM GMT)

3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக மோடி சிங்கப்பூர் சென்று இருக்கிறார்.

புதுடெல்லி,

2 நாள் அரசு முறை பயணமாக புருனே சென்ற பிரதமர் மோடி தனது பயணத்தை முடித்துக்கொண்டு, அங்கிருந்து நேற்று சிங்கப்பூருக்கு சென்றார். சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் விடுத்த அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக அங்கு சென்றுள்ளார். 2018-ம் ஆண்டுக்கு பிறகு 5-வது முறையாகவும், 3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் முறையாகவும் மோடி சிங்கப்பூர் சென்று இருக்கிறார். விமானம் மூலம் சிங்கப்பூர் லயன் நகர் சென்றடைந்த பிரதமர் மோடியை அந்த நாட்டின் உள்துறை மற்றும் சட்ட மந்திரியும், தமிழ் வம்சாவளியுமான கே.சண்முகம் நேரில் வரவேற்றார்.

அதனை தொடர்ந்து, தான் தங்கும் நட்சத்திர ஓட்டலுக்கு மோடி சென்றார். அங்கு திரண்டிருந்த இந்திய வம்சாவளியினர் மேளதாளங்களை வாசித்தும், பாரம்பரிய நடனங்களை ஆடியும் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது மோடி மேளம் வாசித்து அனைவரையும் மகிழ்வித்தார்.அதனை தொடர்ந்து, சிங்கப்பூர் பிரதமர் இல்லத்துக்கு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், பரஸ்பர நலன்சார்ந்த சர்வதேச விவகாரங்கள் தொடர்பாகவும் இருவரும் ஆலோசித்தனர்.


Next Story