ஐ.பி.எல். - டபிள்யூ.பி.எல்.: இறுதி போட்டியில் அதிசய ஒற்றுமைகள்...


ஐ.பி.எல். - டபிள்யூ.பி.எல்.:  இறுதி போட்டியில் அதிசய ஒற்றுமைகள்...
x
தினத்தந்தி 27 May 2024 8:26 AM GMT (Updated: 27 May 2024 10:48 AM GMT)

ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் மற்றும் டபிள்யூ.பி.எல். தொடரின் 2-வது சீசன் இந்த வருடம் நடைபெற்றது.

சென்னை,

கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய 17-வது ஐ.பி.எல். சீசன் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா சாம்பியன் பட்டம் வென்றது.

முன்னதாக இந்த வருடம் நடைபெற்ற டபிள்யூ.பி.எல். தொடரின் 2-வது சீசனில் டெல்லியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.

இந்த இரு தொடர்களின் இறுதிப்போட்டிகளுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் காணப்படுகின்றன. அவை விவரம் பின்வருமாறு:-

1. இரு தொடர்களின் இறுதிப்போட்டிகளிலுமே எதிர் எதிர் அணிகளின் கேப்டன்களாக இந்தியா - ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீரர்களே இருந்துள்ளனர்.

ஐ.பி.எல்.

ஸ்ரேயாஸ் ஐயர் (இந்தியா) - பேட் கம்மின்ஸ் ( ஆஸ்திரேலியா)

டபிள்யூ.பி.எல்.

மந்தனா (இந்தியா) - மெக் லானிங் (ஆஸ்திரேலியா)

2. இரு தொடர்களிலுமே ஆஸ்திரேலிய கேப்டன்களே டாஸ் வென்றுள்ளனர்.

ஐ.பி.எல். - கம்மின்ஸ்

டபிள்யூ.பி.எல்.- மெக் லானிங்

3. இரு தொடர்களின் இறுதிப்போட்டியிலுமே டாஸ் வென்ற கேப்டன்கள் பேட்டிங்கையே தேர்வு செய்துள்ளனர்.

ஐ.பி.எல். - கம்மின்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

டபிள்யூ.பி.எல். - மெக் லானிங் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

4. முதலில் பேட்டிங் செய்த அணி 2 தொடர்களின் இறுதி போட்டியிலுமே 18.3 ஓவர்களில் 113 ரன்களில் ஆல் அவுட் ஆகின.

5. 2 தொடர்களிலுமே இந்திய கேப்டன்களே வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளனர்.

இரு தொடர்களிலும் இவ்வளவு விஷயங்கள் ஒற்றுமையாக உள்ளது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story