இன்றைய ராசிபலன் - 18.07.2024


இன்றைய ராசிபலன் - 18.07.2024
x
தினத்தந்தி 18 July 2024 5:17 AM GMT (Updated: 18 July 2024 5:26 AM GMT)

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் ஆடி மாதம் 2-ம் தேதி வியாழக்கிழமை

நட்சத்திரம் : இன்று அதிகாலை 02.14 வரை அனுஷம் பின்பு கேட்டை

திதி : இன்று இரவு 7.23 வரை துவாதசி பின்பு திரயோதசி

யோகம் : சித்த யோகம்

நல்ல நேரம் காலை : 10.45 - 11.45

ராகு காலம் பிற்பகல் : 1.30 - 3.00

எமகண்டம் காலை : 6.00 - 7.30

குளிகை காலை : 9.00 - 10.30

கௌரி நல்ல நேரம் நண்பகல் : 12.15 - 1.15

கௌரி நல்ல நேரம் இரவு : 6.30 - 7.30

சூலம் : தெற்கு

சந்திராஷ்டமம் : அஸ்வினி

இன்றைய ராசிபலன்:

மேஷம்

இன்று அஸ்வினி நட்சத்திரகாரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் தாங்கள் எந்த ஒரு சுப காரியங்களையும் துவங்க வேண்டாம். கார்த்திகை நட்சத்திரகாரர்கள் தங்கள் பணிகளை துவங்கலாம். புதிய முயற்சிகளையும் மேற்கொள்ளலாம்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

ரிஷபம்

மாணவர்களுக்கு கற்பனைத் திறன் அதிகரிக்கும். ஆசிரியர்களின் பாராட்டை பெறுவர். பெற்றோர்கள் தங்கள் சொத்தினை சரிபாதியாக பிள்ளைகளுக்கு பிரித்து வைத்துவிடுவர். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதற்குண்டான ஆர்டர்களையும் லாபத்தையும் பெறுவர்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

மிதுனம்

தங்கள் துணைவர் தங்கள் சொல்படி நடப்பார். தங்களுடைய கருத்தில் சில உண்மை நிலைகளை அவர் உணர்வார். காதலர்கள் முதலில் பெற்றோர்களுக்கு தங்களின் கடமையை செய்து விடுவர். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை தள்ளிப் போடுவர். பணவரவுக்கு பஞ்சமில்லை.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கடகம்

கலைஞர்கள் புதிய வாய்ப்புகளில் மகிழ்வார்கள். இது நாள் வரை ஏமாற்றிக் கொண்டிருந்த நபர் உங்களிடம் கையும் களவுமாக சிக்கி விடுவார். விவசாயிகளுக்கு அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். பழைய நண்பர்கள் தேடி வந்து உதவி புரிவர். பெண்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

சிம்மம்

உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுக்குண்டான வழி பிறக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தை ஈட்டுவார்கள். தந்தையுடன் இணக்கமுடன் இருந்தால் தங்களுக்கு நன்மை செய்வார். சகோதரர்கள் தங்களை தேடி வந்து மன்னிப்பு கேட்டுப் பின் தங்களிடம் அன்பு பாராட்டுவர்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கன்னி

ஒரு சிலருக்கு கேட்ட இடத்திற்கே உத்யோக மாற்றம் கிடைக்கும். தேக ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். தங்க ஆபரணங்களை வாங்குவீர்கள். காதலர்கள் தங்கள் வேலை தேடும் பணியில் ஆர்வம் கொள்வது நல்லது. வயதானவர்கள் தீர்க்கயாத்திரை மேற்கொள்வர். உடல் நலம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

துலாம்

வெளிநபருக்கு உதவி செய்து பின்பு வருந்துவதை தவிர்க்கவும். பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும். திடீர் பயணம் உற்சாகம் தரும். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் அதிகரித்து மேல் படிப்பிற்காக முயற்சி எடுப்பர்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

விருச்சிகம்

நெருங்கிய நண்பர்கள் தங்களிடம் கொண்டிருந்த மனக்கசப்பு நீங்கி நட்பு பாராட்டுவார்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு உதவுவர். தங்கள் துணையிடம் பெண்கள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. தொழிலில் அதிகமான பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். வியாபாரிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

தனுசு

எதிரிகள் தங்களிடம் சரணடைவர். வழக்குகள் தங்களுக்கு சாதகமாகும். எதிர்பார்த்த நபர் தங்களை தேடி வருவார். நீண்ட நாள் நினைவலைகளை அசைபோடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்புத் தருவர். எதிர்பார்த்த பணம் கைக்கு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மகரம்

பெரும் தொகை கைக்கு கிடைக்கும். வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு தாங்கள் விரும்பிய நாட்டிற்கு செல்ல அனுமதி கிடைக்கும். பெற்றோர் தங்கள் மனநிலைக்கேற்ப ஒத்துழைப்பர். தங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். திருமண முயற்சிகள் வெற்றி தரும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கும்பம்

தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் முதல் இடத்தை பிடிப்பர். நண்பர்களுக்கு மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் உண்டாகும். கலைஞர்களுக்கு புதுப்பட வாய்ப்புகள் கிடைக்கும். தேக ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

மீனம்

பெற்றோர்கள் மீது பிள்ளைகளின் அன்பு அதிகப்படும். ஆதலால், அவர்களின் தேவையை தாங்களாகவே நிறைவேற்றி விடுவீர்கள். வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கல்விக் கடன் மற்றும் வீட்டுக் கடன்களை சரிவர குறித்த நேரத்தில் கட்டிவிடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா


Next Story