வார ராசிபலன் 23.06.2024 முதல் 29.06.2024 வரை


வார ராசிபலன் 23.06.2024 முதல் 29.06.2024 வரை
x
தினத்தந்தி 23 Jun 2024 1:06 AM GMT (Updated: 1 July 2024 7:55 AM GMT)

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்

இந்த வார ராசிபலன்:

மேஷம்

இந்த வாரம் வெளிவட்டார தொடர்புகளால் ஆதாயம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில்துறையினர், வியாபாரிகளுக்கு லாபகரமான வாரம் இது. கலைத்துறையினர் புதுமையான விளம்பரங்களால் பிரபலமடைவார்கள். ஷேர் மார்க்கெட் துறையில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டு. முயற்சிகள் வெற்றி பெறும். குடும்ப உறவினர், நண்பர்கள் வீட்டு விஷேசம், விருந்து, பொழுதுபோக்கு என்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆன்மிக, சமூக காரியங்களில் ஆர்வமுடன் கலந்து கொள்வீர்கள். ஒரு சிலர் சமூக சேவை மூலம் அவரவர் பகுதிகளில் பிரபலம் அடைவார்கள். இல்லத்தரசிகள் குடும்ப உறவுகளிடம் அதிகமாக பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது.

ரிஷபம்

வருமானம் உயரும் காலகட்டம் இது. தொழில்துறையினர், வியாபாரிகளுக்கு லாபகரமான வாரம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி முக்கியத்துவம் பெறுவார்கள். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளை பெறுவார்கள். அனைத்து தரப்பினரிடமும் நல்ல பணப்புழக்கம் இருக்கும். குடும்பத்தில் தாமதமான சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான சூழல் அமையும். இந்த வாரம் இரவு நேர பிரயாணங்களை தவிர்த்து விடுவது நல்லது. தொலைதூர பிரயாணங்களை தள்ளி வைக்கவும். குறிப்பாக இரவு விருந்துகளுக்கு செல்வதை தவிர்ப்பதே நல்லது. பொறுமைக்கு பலன் அளிக்கும் விதமாக நீண்டகாலமாக எதிர்பார்த்த ஒரு விஷயம் நல்லபடியாக நடந்தேறும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாரம்.

மிதுனம்

சிக்கல்களை எதிர்கொண்டு வெற்றி அடையும் வாரம் இது. மனதில் புது உத்வேகத்துடன் உழைப்பில் இறங்குவீர்கள். பயணங்களை திட்டமிட்டு செயல்படுத்தி ஆதாயம் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் ஏற்பட்ட சிக்கல்களை சந்தித்து மீண்டு வருவார்கள். தொழில்துறையினர், வியாபாரிகள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். கலைத்துறையினருக்கு ஏற்பட்ட மன அழுத்தங்கள் வார இறுதியில் விலகும். பணி புரியும் பெண்கள் மேலதிகாரிகளால் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். எவ்வளவு சிக்கல்கள் ஏற்பட்டாலும் மனதில் ஒருவித நம்பிக்கை மேலோங்கி இருக்கும். தகவல் தொடர்பு, ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் ஆகிய துறையினருக்கு ஆதாயம் ஏற்படும். புதிய வெளிவட்டார தொடர்புகளில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

கடகம்

அனைத்து தரப்பினரும் அமைதியாகவும், நிதானமாகவும் செயல்பட வேண்டிய காலகட்டம் இது. உத்தியோகஸ்தர்கள் அதிகம் பேசாமல் தங்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். தொழில்துறையினர், வியாபாரிகள் புதிய சிக்கல்களை சந்தித்து தீர்க்க வேண்டியதாக இருக்கும். கையில் உள்ள பணத்தை வைத்து புதிய முதலீடுகளை செய்யும் முயற்சிகளை தள்ளி வைக்கவும். வீடு, மனை, நிலம் ஆகியவற்றால் ஆதாயம் உண்டு. கோர்ட், கேஸ்களில் சம்பந்தப்பட்டவர்கள் வழக்கு விஷயமாக ஒன்றுக்கு இரண்டாக ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது. புது முயற்சிகளை தவிர்த்து வழக்கமான பணிகளில் ஈடுபடுவதே அனைவருக்கும் ஏற்றது. இல்லத்தரசிகள் மின்சார கருவிகள், சமையல் உபகரணங்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதில் கூடுதல் கவனம் தேவை.

சிம்மம்

தொழில்துறையினர், வியாபாரிகளுக்கு லாபகரமான வாரம் இது. உத்தியோகஸ்தர்கள் வழக்கமான பணிகளையும் சிரமப்பட்டு செய்ய வேண்டியிருக்கும். கலைத்துறையினர் எதிர்பார்த்த அங்கீகாரத்தை பெறுவார்கள். நிலம், வீடு, மனை மூலம் ஆதாயம் உண்டு. விவசாய விளைபொருட்களால் லாபம் ஏற்படும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் மற்றவர்களை நம்பாமல் கணக்கு வழக்குகளை நேரடியாக பார்க்க வேண்டும். மறைமுக எதிரிகள் நீங்கள் அறியாமல் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். குடும்பத்தில் எதிர்பார்த்திருந்த சுப காரியங்கள் நடக்கும். தாமதமான திருமணங்கள் உறவினர் தலையீடு காரணமாக நல்லவிதமாக நடக்கும் சூழ்நிலை ஏற்படும். இல்லத்தரசிகள் மற்றவர் கருத்துகளை முற்றிலும் நம்பாமல் உண்மையை உணர வேண்டும்.

கன்னி

எதிர்பாராத பயணங்களால் நன்மைகள் ஏற்படும் காலகட்டம் இது. தொழில்துறையினர், வியாபாரிகளுக்கு லாபகரமான வாரம். புதிய தொழில் முயற்சிகள், தொழில் விரிவாக்கம் ஆகியவற்றை திட்டமிட்டு மேற்கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் எச்சரிக்கையாகவும், திறமையாகவும் செயல்பட வேண்டியிருக்கும். வரவேண்டிய பணம் வசூலாகும். ஷேர் மார்க்கெட் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் - மனைவியரிடையே இருந்த மனகசப்பு விலகும். வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். எதிராளிகள் செய்த சதித்திட்டங்களை அறிந்து கொள்வீர்கள். ஒரு சிலருக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.

துலாம்

மனதில் ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும் வாரம் இது. குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில்துறையினர், வியாபாரிகளுக்கு லாபகரமான காலகட்டம். உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூலம் ஏற்படும். அரசு ஒப்பந்ததாரர்களுக்கு ஆதாயம் அளிக்கும் வாரம். இந்த வாரம் உடல் நிலையில் கவனமாக இருப்பது அவசியம். கடன் அளிப்பது, பெறுவது ஆகியவற்றை தள்ளி வைப்பது நல்லது. இல்லத்தரசிகள், முதியோர்கள், மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் இந்த வாரம் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். திருமண முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. நண்பர்களுடன் சேர்ந்து நீண்ட தூர வாகன பயணங்களை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். பெண்களுக்கு வயிற்றில் வலி ஏற்பட்டால் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

விருச்சிகம்

உத்தியோகஸ்தர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும் வாரம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். தொழில்துறையினர் ஊழியர்களை அனுசரித்து செல்ல வேண்டிய சூழல் உருவாகும். ரியல் எஸ்டேட், தகவல் தொடர்பு, ஷேர் மார்க்கெட் ஆகிய துறையினருக்கு ஆதாயம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். தனிப்பட்ட சேமிப்பை உயர்த்தும் வகையில் பணப்புழக்கம் இருக்கும். எதிர்பார்த்த அரசு காரியங்கள் நிறைவேறுவதில் தடைதாமதங்கள் ஏற்படும். திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களில் தேவையற்ற கால தாமதங்கள் உருவாகும். இல்லத்தரசிகள், பணியாற்றும் பெண்மணிகள் உடன் இருப்பவர்களோடு முரண்படாமல் செயல்பட வேண்டும்.

தனுசு

வெளிவட்டார தகவல் தொடர்புகளால் ஆதாயம் ஏற்படும். தொழில் துறையினர், வியாபாரிகளுக்கு லாபகரமான காலகட்டம். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் அதிகமாகும். ஏற்றுமதி துறையினருக்கு இந்த வாரம் அனுகூலம் ஏற்படும். வெளிநாட்டில் பணியாற்றுவோர் சொந்த நாட்டுக்கு வந்து செல்லும் வாய்ப்பு கிடைக்கும். ஷேர் மார்க்கெட், தகவல் தொடர்பு துறையினர் புதிய தொடர்புகளால் லாபமடைவார்கள். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு தங்கள் திறமையை நிரூபிக்கும் சூழல் உருவாகும். நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியான பயணங்கள் மேற்கொள்வீர்கள். இல்லத்தரசிகளுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். பணியாற்றும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் இடமாற்றம் உண்டு. சுறுசுறுப்பாக செயல்பட்டு காரிய வெற்றி பெற வேண்டிய வாரம்.

மகரம்

பிரார்த்தனைகள், நம்பிக்கைகள் பலிதமாகும் காலகட்டம் இது. உத்தியாகஸ்தர்கள், தொழில்துறையினர், வியாபாரிகள், கலைத்துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் லாபகரமான காலகட்டம். பங்கு வர்த்தகத்தில் உள்ளோர் இந்த வாரம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள், முதியவர்கள், சுவாச கோளாறு உள்ளோர் இரவு நேரங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொலைதூர பயணங்கள், இரவு பயணங்கள் ஆகியவற்றை இயன்றவரை தவிர்த்து விடுவதே நல்லது. குறுகிய பயணங்களை பகலில் மட்டும் மேற்கொள்வது புத்திசாலித்தனம். அனைத்து தரப்பினரும் வழக்கமான பகல் நேர பணிகளில் ஈடுபடுவதில் எவ்வித தடைகளும் இல்லை.

கும்பம்

பல சோதனைகளை எதிர்கொண்டு வெற்றி அடையும் காலகட்டம் இது. தொழில்துறையினருக்கு உழைப்புக்கேற்ற லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் இந்த வாரம் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஷேர் மார்க்கெட், தகவல் தொடர்பு துறையில் உள்ளவர்களுக்கு ஆதாயம் உண்டு. வாழ்க்கை துணையிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். பழைய கடனில் பெரும் பகுதியையோ, அதன் ஒரு பகுதியையோ தீர்ப்பீர்கள். தொலைபேசி வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும். இந்த வாரம் கையில் பணம் புரளும். உங்கள் வாழ்க்கை அனுபவங்களை பலருக்கும் ஆலோசனையாக தெரிவிப்பீர்கள். பணியாற்றும் பெண்மணிகள் தங்கள் பணிகளில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் யாராக இருந்தாலும் பணியை தவிர இதர விஷயங்களை பேச வேண்டாம்.

மீனம்

சுபச் செலவுகளை செய்து மகிழ்ச்சி அடையும் வாரம் இது. தொழில்துறையினர், உத்தியோகஸ்தர்கள், வியாபாரிகள் ஆகியோர் எதிர்பார்த்த லாபத்தை பெறுவார்கள். ரியல் எஸ்டேட் துறையினருக்கு அனுகூலமான வாரம். கலைத்துறையில் இருப்போருக்கு புதிய வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். நண்பர்களோடு சேர்ந்து மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். செலவுகளுக்கேற்ற பணம் கைகளில் புரளும். குடும்பத்தினருடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு அகலும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு தொழில் விரிவாக்கம் செய்யும் சூழல் உருவாகும். வீடு, மனை, நிலம் ஆகிய அசையா சொத்துகள் மூலம் ஆதாயங்கள் ஏற்படும். ஒரு சிலருக்கு பண்ணை நிலம், தோட்டம் ஆகியவற்றை வாங்கும் யோகம் உண்டு.


Next Story