சிமி டெலஸ்கோப்!


சிமி டெலஸ்கோப்!
x

பல பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிலிருந்து வரும் ரேடியோ அலைகளை பதிவு செய்து அறிய உதவுகிறது சிமி எனும் ரேடியோ டெலஸ்கோப்.

10 ஆண்டுகளுக்கு முன்பே உருவாகத் தொடங்கிய இது தற்போதுதான் முழு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 400-800Mhz ரேடியோ அலைகளை ஈர்க்கும் சக்தி கொண்ட சிமி, 3-டியில் இதற்கான வரைபடத்தை உருவாக்குகிறது. கனடாவின் டி.ஆர்.ஏ.ஓ.வில் (DRAO) அமைக்கப்பட்டுள்ள சிமி டெலஸ்கோப், தேசிய ஆராய்ச்சி கவுன்சிலால் கட்டுப்படுத்தப்படுகிறது.

சிமி டெலஸ்கோப், தினசரி 50-ற்கும் மேற்பட்ட ரேடியோ அலை வெடிப்புகளை கண்டறிகிறது. கூடவே, விண்ணில் இருந்து வரும் கதிர்வீச்சுக்களை பதிவு செய்ய பயன்படுகிறது. இத்திட்டத்தில் பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் மெக்ஹில் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களும் பங்கேற்றுள்ளன.


Next Story