பேஷன் டிசைனரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது


பேஷன் டிசைனரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 Oct 2023 8:00 PM GMT (Updated: 25 Oct 2023 8:00 PM GMT)

பேஷன் டிசைனரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் குஜராத்தில் கைது செய்தனர்

மும்பை,

மும்பை வில்லேபார்லேயை சேர்ந்த 46 வயது பெண் ஒருவர் பேஷன் டிசைனராக இருந்து வருகிறார். இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 7-ந்தேதி வாட்ஸ்அப்பில் அடையாளம் தெரியாத நம்பரில் இருந்து குறுந்தகவல் வந்தது. இதில், அவரது பெயர் திவ்யா எனவும், சமூகவலைத்தளத்தில் மார்க்கெட்டிங் செய்து வருவதாகவும் தெரிவித்தார். இந்த மார்க்கெட்டிங்கில் இணைந்து பணத்தை முதலீடு செய்தால் 30 முதல் 40 சதவீதம் வருமானம் கிடைக்கும் என தெரிவித்து இருந்தார். மேலும் பேஷன் டிசைனரை நம்ப வைப்பதற்காக சிறிய தொகையை திவ்யா அனுப்பி வைத்தார். இதனை நம்பிய பேஷன் டிசைனர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ரூ.10 லட்சத்து 67 ஆயிரத்தை முதலீடு செய்தார். ஆனால் வருமானம் கிடைக்கவில்லை. மேலும் திவ்யாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. இது பற்றி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் நடத்திய விசாரணையில் மோசடி செய்தவர்கள் பெண்கள் பெயரில் ஆண் பேர்வழிகள் எனவும், அவர்கள் பெயர் சுமித் குப்தா (வயது36), பார்த் பஞ்சால் (25) என்பதும் தெரியவந்தது. குஜராத்தில் பதுங்கி இருந்த அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.6 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story