5 நாட்கள் குறைந்த அழுத்தத்துடன் குடிநீர் வினியோகம்


5 நாட்கள் குறைந்த அழுத்தத்துடன் குடிநீர் வினியோகம்
x
தினத்தந்தி 31 May 2023 6:45 PM GMT (Updated: 31 May 2023 6:46 PM GMT)

மும்பை,

மும்பை சாந்தாகுருஸ் கிழக்கு ஆசிரியர் காலனி பகுதியில் 1,200 மி.மீ. விட்டம் கொண்ட குழாயில் பராமரிப்பு பணி மாநகராட்சி சார்பில் நடைபெற உள்ளது. மேலும் ஹன்ஸ்பர்கா சாலையில் உள்ள குழாயில் குடிநீர் கசிவை சரி செய்யும் பணி நடக்கிறது. இதன் காரணமாக வருகிற 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரையில் மும்பை சாந்தாகுருஸ் எச் கிழக்கு வார்டு உள்பட சில இடங்களில் குடிநீர் குறைந்த அழுத்தத்துடன் வினியோகம் செய்யப்படும். இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் இடங்களான 4-ந் தேதி அன்று பாந்திரா குர்லா காம்பளக்ஸ் பகுதியில் காலை 8.30 மணி முதல் 10.45 மணி வரையிலும், மறுநாள் 5-ந்தேதி முதல் 8-ந்தேதி வரையில் எச் கிழக்கு வார்டு பிரிவில் பாரத் நகர், வால்மீகி நகர், மகாராஷ்டிரா நகர் ஆகிய இடங்களில் குறைந்த அழுத்தத்துடன் குடிநீர் வினியோகம் செய்யப்படும். இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக செலவழித்து ஒத்துழைப்பு தரும்படி மாநகராட்சி தெரிவித்து உள்ளது.


Next Story