மும்பையில் இருந்து சென்ற பஸ் கவிழ்ந்து 5 பேர் பலி


மும்பையில் இருந்து சென்ற பஸ் கவிழ்ந்து 5 பேர் பலி
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:45 PM GMT)

மும்பையில் இருந்து சென்ற பஸ் கவிழ்ந்து 5 பேர் பலியாகினர்.

மும்பை,

மும்பையில் இருந்து பீட் நோக்கி நேற்று முன்தினம் இரவு தனியார் பஸ் புறப்பட்டது. பஸ் நேற்று அதிகாலை 6 மணியளவில் பீட் மாவட்டம், ஆஸ்தா பாடா பகுதியில் சென்று கொண்டு இருந்தது. பஸ் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. தறிகெட்டு ஓடிய பஸ் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் தோன்டிபா ஷிண்டே, தேவ்தத், முகமது ஆசிப், அசோக், ரவி ஆகிய 5 பேர் பலியானார்கள். இவர்ளில் 4 பேர் பீட் மாவட்டத்தையும், ஒருவர் யவத்மாலையும் சேர்ந்தவர் ஆவர். காயமடைந்த 26 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story