இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
இன்று திருவோண விரதம். சுபமுகூர்த்த தினம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அலங்காரம்.
பஞ்சாங்கம்:
சோபகிருது ஆண்டு, கார்த்திகை 3ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)
திதி: சஷ்டி காலை 7.55 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம்: திருவோணம் இரவு 11:38 மணி வரை பிறகு அவிட்டம்
யோகம்: அமிர்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை
எமகண்டம்: மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 8.30 மணி முதல் 9 மணி வரை மற்றும் மாலை 2 மணி முதல் 3 மணி வரை
இன்றைய முக்கிய நிகழ்வுகள் :
இன்று திருவோண விரதம். சுபமுகூர்த்த தினம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அலங்காரம். சுவாமிமலை முருகப் பெருமான் இடும்ப வாகனத்தில் பவனி. திருவண்ணாமலை அருணாசல நாயகர் காலை பூத வாகனத்தில் பவனி. சிக்கல் சிங்காரவேலர் காலை சூர்ணோற்சவம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமார், திருவல்லிக்கேணி, ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம் - இன்று பொழுது விடியும் பொழுதே பொன்னான தகவல் வந்து சேரும். வியாபார முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லை நீங்கும்.
ரிஷபம் - இன்று மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும். உறவினர்கள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உத்தியோகத்தில் வீண் விரோதங்கள் ஏற்படும். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது.
மிதுனம் - எந்த விஷத்தை செய்தாலும் யோசித்து செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றம், இட மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். பிறருக்குநன்மை செய்தாலும் அது தீமையாக தெரியும். உறவினர்கள் உங்களை உதாசீனப்படுத்தலாம்.
கடகம் - நிகழ்கால தேவைகள் பூர்த்தி யாகும் நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பெற்றோர்களின் விருப்பத்தை அறிந்து அதனை பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் உறுதியாகலாம்.
சிம்மம் - வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள் இன்று. நேற்று பாதியில் பணி இன்று மீதியும் தொடரும். பக்கத்தில் இருந்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும்.
கன்னி - பொறுமையை கடைப்பிடித்து பெருமை காண வேண்டிய நாள். உறவினர்களின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியத்தை செய்து முடிப்பீர்கள். வரவு திருப்தியாக செலவுகள் கூடுதலாக இருக்கும்.
துலாம் - பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பழைய வாகனங்களை கொடுத்துவிட்டு புதிய வாகனங்கள் வாங்க முயற்சிப்பீர்கள். நாட்டுப்பற்று மிக்கவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பர்.
விருச்சிகம் - முக்கிய புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கிடைக்கும் நாள். தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர். சகோதரத்தால் நன்மை கிட்டும்.
தனுசு - பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். தொழில் செய்வதற்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும்.
மகரம் - பயணங்களால் பயன் கிடைக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுணங்கிய காரியம் சுறுசுறுப்பாக நடைபெறும். வருமானம் உயரும். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு.
கும்பம் - முயற்சியில் வெற்றி கிடைக்கும் முக்கிய புள்ளிகளின் சந்திப்பு உண்டு. வருமானம் திருப்தி தரும். வீட்டிற்கு தேவையான அத்தியாவ சிய பொருட்களை வாங்கி மகிழ் வீர்கள். நட்பால் நன்மை உண்டு.
மீனம் - அக்கறை செலுத்தாத காரியங் களில் கூட ஆதாயம் கிடைக்கும் நாள். வி.ஐ.பி.க்களின் ஒத்துழைப்பால் விரும்பிய காரியம் நடைபெறும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர் இருக்கும். கள் உறுதுணையாக இருப்பர்.
சந்திராஷ்டமம்: மிதுனம்