பிரம்மோற்சவம்: கோவர்த்தனகிரி கிருஷ்ணர் அலங்காரத்தில் அருள்பாலித்த பத்மாவதி தாயார்
திருச்சானூரில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தில் நாலை காலை 8 மணி முதல் 10 மணி வரை தேரோட்டம் நடைபெறுகிறது.
திருச்சானூர்:
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலையிலும் இரவிலும் தாயார் வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
சின்ன சேஷ வாகனம், பெரிய சேஷ வாகனம், ஹம்ச வாகனம், முத்தையாபு பாண்டிரி வாகனம் மற்றும் சிம்ம வாகன சேவை, கல்ப விருட்ச வாகன சேவை, ஹனுமந்த வாகன சேவை, சர்வ பூபால வாகன சேவையைத் தொடர்ந்து நேற்று இரவு முக்கிய நிகழ்வான கருட சேவை நடைபெற்றது.
விழாவின் 7-ம் நாளான இன்று காலையில் பத்மாவதி தாயார் சூரிய பிரபை வாகனத்தில் கோவர்த்தனகிரி கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளி, மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று இரவு சந்திர பிரபை வாகன சேவை நடைபெறுகிறது. 05.12.2024 காலை 8 மணி முதல் 10 மணி வரை தேரோட்டம் நடைபெறுகிறது.