திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்


Tirupati Alwar Tirumanjanam
x
தினத்தந்தி 9 July 2024 9:57 AM GMT (Updated: 9 July 2024 11:29 AM GMT)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆணிவார ஆஸ்தான தினத்தை முன்னிட்டு இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.

திருப்பதி,

யுகாதி, வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, ஆனிவார ஆஸ்தானம் ஆகிய நாட்களுக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமை அன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் என்ற பெயரில், கோவிலை முழுமையாக கழுவி சுத்தம் செய்து சுவர்களில் 'பரிமளம்' எனப்படும் நறுமனை கலவை தெளிப்பது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு வருகிற 16-ந்தேதி ஆனிவார ஆஸ்தான தினத்தை முன்னிட்டு, இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. அப்போது தேவஸ்தான அறங்காவலர் குழுவினர், நிர்வாக அதிகாரி, ஊழியர்கள் ஆகியோர் கோவில் கருவறை துவங்கி அனைத்து பகுதிகளையும் கழுவி சுத்தம் செய்தனர். ஆழ்வார் திருமஞ்சனத்தை தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.


Next Story