இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (13.12.2024)
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 13 Dec 2024 7:34 PM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- 13 Dec 2024 6:46 PM IST
கார்த்திகை தீபத் திருவிழா.. அண்ணாமலையார் மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்வாக, கோவிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் சிவ முழக்கம் எழுப்பி தரிசனம் செய்தனர். மோட்ச தீபம் எனப்படும் இந்த மகாதீபம் 11 நாட்கள் தொடர்ந்து எரியும்.
- 13 Dec 2024 5:56 PM IST
கனமழையால் பாதிக்கப்பட்ட பயிருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
- 13 Dec 2024 5:54 PM IST
கைது செய்யப்பட்டுள்ள அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி தெலுங்கானா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- 13 Dec 2024 5:54 PM IST
மதுரையில் கனமழை; மீனாட்சியம்மன் கோவில் முன்பு குளம் போல் தேங்கி நிற்கும் தண்ணீர்
- 13 Dec 2024 5:20 PM IST
குற்றால அருவிகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு முற்றிலும் தடை
- 13 Dec 2024 5:19 PM IST
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
சிக்கட்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அல்லு அர்ஜுன் பின்னர் நம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அதேவேளை, தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அல்லு அர்ஜுன் தெலுங்கானா ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த வழக்கு இதுவரை விசாரணைக்கு வரவில்லை.