இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (13.12.2024)
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 13 Dec 2024 4:54 PM IST
திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை உச்சியில் இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக பிரமாண்ட தீப கொப்பரையில் தீபம் தயாராக உள்ளது.
- 13 Dec 2024 4:21 PM IST
குடிநீரில் கழிவுநீர் கலந்ததன் காரணமாகப் பறிபோன மூன்று உயிர்களுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் என்ன பதில் கூறுவார்? என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
- 13 Dec 2024 3:52 PM IST
எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்க கூடாது என்ற உத்தரவு ரத்து: சென்னை ஐகோர்ட்டு
- 13 Dec 2024 3:50 PM IST
தென் மாவட்டங்களில் கனமழை: கட்டுப்பாட்டு அறையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்றார். அப்போது, கனமழை பெய்து வருவதையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொலிக் காட்சி வாயிலாக திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்ட கலெக்டர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
- 13 Dec 2024 3:32 PM IST
'உரிமைகளை தந்தது அரசியல் சாசனம்': மக்களவையில் முதல்முறையாக பிரியங்கா காந்தி பேச்சு