இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (13.12.2024)


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (13.12.2024)
x
தினத்தந்தி 13 Dec 2024 8:59 AM IST (Updated: 14 Dec 2024 7:59 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

சென்னை


Live Updates

  • 13 Dec 2024 3:31 PM IST

    தமிழ்நாட்டின் கூட்டுறவு வங்கிகளுக்கு 5 விருதுகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    டெல்லியில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாட்டின் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்பட்ட ஐந்து விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வாழ்த்து பெற்றார்.

  • 13 Dec 2024 3:29 PM IST

    மதவழிபாட்டு தலத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்

  • 13 Dec 2024 2:52 PM IST

    சட்டமன்ற நாட்களை குறைத்து ஜனநாயகத்தின் குரல் வளையை தி.மு.க. அரசு நசுக்குகிறது - ஓ.பன்னீர்செல்வம்

    சட்டமன்றத்திலேயே ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

  • 13 Dec 2024 2:44 PM IST

    'மண்டேலா' பட இயக்குனருடன் இணையும் நடிகர் விக்ரம்!

  • 13 Dec 2024 2:08 PM IST

    ஊட்டச்சத்து குறைபாட்டால் தமிழகத்தில் ஆண்டுக்கு 82 ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பு? - தமிழக அரசு விளக்கம்

    ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக தமிழ்நாட்டில் வருடத்துக்கு 10 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன எனவும் அதில் 82 ஆயிரம் குழந்தைகள் இறந்துவிடுகிறார்கள் என்றும் ஒருவர் கூறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் மறுத்துள்ளது.

  • 13 Dec 2024 1:29 PM IST

    உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ. 5 கோடி பரிசுத்தொகை - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    தமிழகத்திற்கு பெருமை சேர்த்த உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 5 கோடி பரிசுத்தொகையாக அறிவித்துள்ளார்.

  • 13 Dec 2024 1:24 PM IST

    கன்னியாகுமரி, தென்காசி உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • 13 Dec 2024 1:22 PM IST

    ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் மோசடி: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

    பெயரை மாற்றி மக்களை ஏமாற்றுவதா திராவிட மாடல்? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story