மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது


தினத்தந்தி 30 Nov 2024 12:34 AM IST (Updated: 1 Dec 2024 1:49 AM IST)
t-max-icont-min-icon

புயல் முழுமையாக கரையை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை


Live Updates

  • சென்னை கடற்கரை - வேளச்சேரி மின்சார ரெயில் சேவை ரத்து
    30 Nov 2024 1:01 PM IST

    சென்னை கடற்கரை - வேளச்சேரி மின்சார ரெயில் சேவை ரத்து

    பலத்த காற்று வீசுவதால் சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையேயான மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவ.30 நண்பகல் 12.15 மணி முதல் சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையேயான மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

  • 30 Nov 2024 12:51 PM IST

    மதுராந்தகம்: சென்னை - திருச்சி தேசிய நெடிஞ்சாலையில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

  • 30 Nov 2024 12:46 PM IST

    புயல் கரையை கடக்க தாமதமாக வாய்ப்பு

    பெஞ்சல் புயல் கரையை கடக்க தொடர்ந்து தாமதமாக வாய்ப்பு உள்ளது. புயல் கரையை கடக்க நாளை அதிகாலை வரை ஆகலாம். சென்னை -புதுச்சேரி இடையே மரக்காணம் மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறியுள்ளார்.

  • 30 Nov 2024 12:43 PM IST

    சென்னையில் காலை 11 மணி நிலவரப்படி 7 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது. கெங்கு ரெட்டி, ஆர்.பி.ஐ. அஜாக்ஸ், பெரம்பூர், சுந்தரம் பாயிண்ட், ரங்கராஜபுரம் டூ வீலர் பாதை, பழவந்தாங்கல் உள்ளிட்ட 7 சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளன.

  • 30 Nov 2024 12:41 PM IST

    கனமழை காரணமாக கூவம் ஆற்றின் இருபுறங்களிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மதுரவாயில், வானகரம், திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • 30 Nov 2024 12:05 PM IST

    45 நிமிடங்களுக்கு ஒருமுறை மின்சார ரெயில்கள் இயக்கம்

    சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் மின்சார ரெயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது.வழக்கமான நேரத்தை விட 45 நிமிடங்களுக்கு ஒருமுறை மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மற்றும் வேளச்சேரி செல்லும் மின்சார ரெயில்கள் குறைக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் மின்சார ரெயில்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

  • 30 Nov 2024 12:02 PM IST

    கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக நொளம்பூர் - மதுரவாயல் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.  தரைப்பாலம் மூழ்கியதால் வாகனங்கள் செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது. 

  • 30 Nov 2024 11:56 AM IST

    மரக்காணம் பகுதி மக்கள் வெளியே வரக்கூடாது

    மரக்காணம் அருகே புயல் கரையை கடக்க உள்ளதால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அவசர தேவை எனில் மாவட்ட அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி அறிவுரை வழங்கி உள்ளார். 

  • 30 Nov 2024 11:52 AM IST

    சென்னை விமான நிலையம் மூடல்

    தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஓடுதளத்தில் தண்ணீர் தேங்கி விமானங்கள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 30 Nov 2024 11:48 AM IST

    கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 449 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 3,745 கன அடியாக உயர்ந்துள்ளது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 18.82 அடியை எட்டியுள்ளது. 


Next Story