மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது
புயல் முழுமையாக கரையை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Live Updates
- 30 Nov 2024 11:42 AM IST
புயல் காரணமாக பொது மக்களை கடற்கரை பகுதிக்கு செல்ல போலீசார் தடை விதித்துள்ளதால் பாண்டி மெரினா கடற்கரை ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
- 30 Nov 2024 11:38 AM IST
சென்னையில் நள்ளிரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் அசோக் நகர் பாரதிதாசன் காலணியில் மழைநேர் தேங்கி உள்ளது. மோட்டார்கள் மூலம் நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- 30 Nov 2024 11:31 AM IST
110 கி.மீ தொலைவில் பெஞ்சல் புயல்
சென்னையில் இருந்து 110 கி.மீ தொலைவில் பெஞ்சல் புயல் மையம் கொண்டுள்ளது. பெஞ்சல் புயல் மேற்கு - வடமேற்கு திசையில் தற்போது 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி கடற்கரை பகுதியில் கரையை கடக்க கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 30 Nov 2024 11:22 AM IST
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 447 கன அடியாக இருந்த நீர்வரத்து 2,773 கன அடியாக அதிகரித்துள்ளது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 18.67 அடியை எட்டியுள்ளது.
- 30 Nov 2024 11:19 AM IST
சென்னை மாநகரம் முழுவதும் நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. காற்றுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது.முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.
- 30 Nov 2024 11:12 AM IST
சென்னையில் மெட்ரோ ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. தாமதம் இன்றி இயங்கிவரும் மெட்ரோ ரெயில் சேவையை மக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
- 30 Nov 2024 11:09 AM IST
சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் 7-வது அவன்யூவில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். பெஞ்சல் புயல் எதிரொலியாக தொடர் கனமழை பெய்துவரும் நிலையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
- 30 Nov 2024 10:51 AM IST
புறநகர் மின்சார ரெயில் சேவைகள் குறைப்பு
கனமழை எதிரொலி காரணமாக சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளது. வழக்கமான நேர அட்டவணைப்படி இல்லாமல் குறைந்த அளவிலான மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே அறிவித்துள்ளது.
- 30 Nov 2024 10:45 AM IST
சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
- 30 Nov 2024 10:41 AM IST
பெஞ்சல் புயல் காரணமாக நள்ளிரவு முதல் சென்னையில் கன மழையானது பெய்து வரும் நிலையில் கத்திவாக்கம் -12 செ.மீ, திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, சோழிங்கநல்லூர் தலா 9 செ.மீ பொன்னேரி, மணலி, ஐஸ் அவுஸ், மத்திய சென்னையில் தலா 8 செ.மீ மழை பதிவாகி உள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக எண்ணூரில் 13 செ.மீ மழைபதிவாகி உள்ளது.